மாஸ்... 100 நாட்களுக்கு 1000 சிறப்பு ரயில்கள்... கொண்டாட்டத்துக்கு தயாராகும் அயோத்தி..!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

அயோதியில் ராமர் கோவில் ஜனவர் 19ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதனை மேலும் சிறப்பாக்கும் வகையிலும் இந்தியா முழுவதும் பக்தர்கள் தடையின்றி வந்து செல்லும் வகையிலும்   ஜனவரி 19  முதல் 100 நாட்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1000 ரயில்களை  இயக்க உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ளது.  2024   ஜனவரியில்   அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் பக்தர்கள் சிரமமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வந்து வழிபாடு செய்யும் வகையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

அயோத்தி
ஜனவரி 23 முதல் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக  திறக்கப்படுகிறது. இந்த கோவிலில்   ஸ்ரீ ராமரின்  சிலை வைக்கப்பட உள்ளது .  இதனையடுத்து  இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், பூனே, கொல்கத்தா, நாக்பூர், லக்னோ மற்றும் ஜம்முவில் இருந்து   அயோத்திக்கு   சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.   தேவையை பொருத்து இந்த ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.  மக்கள் கூட்டத்தை கையாளும் அளவிற்கு அயோத்தியா ரயில் நிலையத்தில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத்

இங்கு ஒரே நேரத்தில் சுமார் 50,000 பேர் வரை வந்து செல்லும் வகையில் ரயில்நிலையம் புதுப்பிக்கப்பட்டு   ஜனவரி 15ம் தேதி முழு செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்துள்ளது.   அத்துடன் அயோத்திக்கு வந்து ஸ்ரீ ராமரை தரிசித்து செல்ல வரும் யாத்திரைகளுக்கான  சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட உள்ளன.  பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு தேவையான உணவு, கழிப்பிட வசதி , பயண வசதிகளை வழங்கவும் ஐஆர்சிடிசி தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது.   மேலும் அயோத்தியை காணவரும் பக்தர்களுக்கு மின்சாரத்தின் மூலம் இயக்கப்படும் கட்டுமரத்தில் புனித சரயூ நதியில் ஒரு அழகிய பயணம் கூட்டிச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுமரத்தில் ஒரே நேரத்தில் 100 பேர் வரை பயணிக்கலாம் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web