அட்ரா சக்க... 10000 பேருக்கு வேலை வாய்ப்பு... HCL அதிரடி அறிவிப்பு...!!

 
ஹெச்சிஎல்

இந்தியாவில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய தனியார் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல்.  இந்நிறுவனம்  நடப்பு  நிதியாண்டில் 10000 பேர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  கொரோனா காலகட்டத்தில்  அனைத்து துறைகளை போல், ஐடி நிறுவனங்களிலும் வருமானம் குறைந்தது.

ஹெச்சிஎல்

அந்த சமயத்தில் இந்நிறுவனங்களில் செலவுகளைக் குறைக்க ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே போல் புதியதாக ஆட்களை பணியில் அமர்த்துவதும் குறைந்தது.  தற்போது  பொருளாதாரம் சற்று சீரான நிலையில் புதியவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க ஹெச்.சி.எல் நிறுவனம் முன்வந்துள்ளது.

வேலை வாய்ப்பு

அதன்படி 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஹெச்.சி.எல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஹெச்.சி.எல். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐடி நிறுவனங்கள் சரிவை சந்தித்து வரும் நிலையில், கல்லூரி  மாணவர்களிடையே இந்த அறிவிப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!