1,00,000 சரவெடி.. 4.12 நிமிடங்களுக்கு இடைவிடாமல் கேட்ட பட்டாசு சத்தம்... குடும்பங்கள் ஒன்றிணைந்து தீபாவளி கொண்டாட்டம்!

 
பட்டாசு சரம் தீபாவளி

தீபாவளி கொண்டாட்டத்தை வித்தியாசமாக நினைவில் நிற்கச் செய்ய, கடலூர் மாவட்டத்தில் 10 குடும்பங்கள் ஒன்று இணைந்து 1 லட்சம் சரவெடியை ஒரே தடவையில் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு விபத்து

குறிஞ்சிபாடி தாலுகா கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த 10 குடும்பத்தினர் தலா 10 ஆயிரம் சரவெடிகளை வாங்கினர். அவற்றை ஒன்றாக சேர்த்து மொத்தம் 1 லட்சம் சரவெடியாக மாற்றினர். பின்னர், தீப்பொறி வைக்கப்பட்டவுடன் “பட்...படார்...படார்...” என இடைவிடாமல் சுமார் 4 நிமிடம் 12 வினாடிகள் தொடர்ந்து சரவெடிகள் வெடித்தன.

பட்டாசு

தொடர்ச்சியான இந்த பட்டாசு சத்தம், அந்த பகுதியெங்கும் தீபாவளி உற்சாகத்தை அதிகரித்தது. நிகழ்வை சுற்றுப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். குறுகிய நேரத்தில் வீடியோ வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த அளவிலான பட்டாசு வெடிப்பை பலர் “இது தான்யா உண்மையான தீபாவளி” என பாராட்டியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?