தமிழக அரசு 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு... தணிக்கைத்துறை அதிர்ச்சி!!

 
சிம் கார்டுகள்

 2021ல் இந்தியாவில் வேகமெடுக்க தொடங்கிய கொரோனா பரவல் காரணமாக  நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள   அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில்   பயிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலம்  கல்வி பயில்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் 4 ஜி டேட்டாக்களுடன் கூடிய சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

கல்லூரி மாணவிகள்
அதற்காக மொத்தமாக 9 லட்சம்  சிம் கார்டுகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில்  1,10,846 சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. இந்த  தகவலை தற்போது   தணிக்கைத்துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.  இதனால் தமிழக அரசுக்கு 3.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தணிக்கைத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web