தீப்பிடித்து எரிந்த 108 ஆம்புலன்ஸ்!! வெடித்து சிதறிய ஆக்சிஜன் சிலிண்டர்!!

 
தீப்பிடித்த ஆம்புலன்ஸ்

 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம்   பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர தேவைக்காக   108 ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.  நேற்று இரவு ஆம்புலன்ஸ் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயற்சி செய்தனர்.   ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அதிக சத்துத்துடன் வெடித்து, தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீவிபத்து

தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால்  தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 108 ஆம்புலன்ஸ் முற்றிலும் தீயில் கருகி சாம்பலானது.   
அப்போது ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்தது.  அதன் காரணமாக தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

போலீஸ்

இச்சம்பவம் குறித்து   வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.   முதற்கட்ட விசாரணையில்,  108 ஆம்புலன்ஸ் வாகனம் சர்வீஸ் முடிந்து மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது,   ரிவர்ஸ் கியரில் நிறுத்தி வைத்திருந்த நிலையில் டேஞ்சர் லைட்டுக்கு செல்லும் ஒயரில்  மின்கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக தீப்பற்றி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web