நாளை 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு!

 
பள்ளி விடுமுறை School Holiday

நாளை திட்டமிட்டப்படியே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் + 2 பொதுத்தேர்வுகள் மே 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 30ம் தேதியும் முடிவடைந்துள்ளன. தற்போது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 1ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13 திங்கட் கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தேர்வு

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி ஜூன் 17ம் தேதி நாளை வெளியிடப்படும் எனத்  தகவல் வெளியாகியுள்ளது.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. இதனால் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  ஜூன் 23ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தேர்வு
இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2,25,534 மாணவர்கள், 11ம் வகுப்பு தேர்வை 2,58,641 மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்வை 1,95,292 மாணவர்கள் என மொத்தம் 6,79,467 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகவில்லை. இவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் . 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web