வகுப்பறையில் பள்ளி மாணவன் தற்கொலை... கதறித் துடித்த சக மாணவர்கள்... !!

 
10ம்

இன்றைய கல்வி முறையில் மாணவர்களிடையே நம்பிக்கை எதையும் எதிர்த்து போராடும் திறமை குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர். பிறந்தது முதல் பார்க்கிற அனைத்தும் கிடைத்து விடுகிற மனோபாவம் வளர்ந்து பிறகும் ஏதாவது ஒன்று கிடைக்கவில்லை எனில் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.  இல்லை என்றாலோ கிடைக்காது என்றாலோ போராடி அதை பெறுவோம் என்ற எண்ணம் வளர்வதில்லை.

சிறுவன் பலி

மாறாக விபரீதமுடிவுகளை நோக்கி சென்று விடுகின்றனர். அந்த வகையில் 10ம்வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஜெகந்நாதன் மகன் தீபக் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

இன்று காலை எப்போதும் போல் பள்ளிக்கு கிளம்பி சென்ற தீபக் வகுப்பறையிலேயே தற்கொலை செய்து கொண்டான்.  வகுப்பறைக்குள் நுழைந்த போது சக மாணவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு சென்ற காவல் துறையினர் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவன் கடந்த 6 மாதங்களுக்கு முன் காணாமல் போனவன். 10 நாட்களுக்கு பிறகு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web