பட்டாசு குடோன் தீவிபத்தில் 11 பேர் உடல் கருகி பலி ... சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

 
பட்டாசு குடோன் தீப்பிடித்து பலி

 தமிழ்நாடு-கர்நாடக எல்லை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் அத்திப்பள்ளி என்ற இடம் அமைந்துள்ளது. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் 10க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. நவீன் என்பவரின் பட்டாசு கடையும்  குடோனும் செயல்பட்டு வந்தது.  தீபாவளிக்காக  விற்பனையை விரிவு செய்யும் வகையில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வாணியம்பாடியைச் சேர்ந்த இளைஞர்கள் 30க்கும் மேற்பட்டோரை தற்காலிக பணியில் அமர்த்தியிருந்தார். இளைஞர்கள் அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு சிலர் கல்லூரி மாணவர்கள்.  சனிக்கிழமை மாலை 3 மணியளவில் புதிதாக வந்த பட்டாசு பண்டல்களை இளைஞர்கள் குடோனுக்கு எடுத்து சென்று அடுக்கி கொண்டிருந்தனர். திடீரென குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.   

பட்டாசு குடோன்

மேலும் விபத்தில் 9 பைக்குகள், ஒரு டெம்போ வேன் உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாஅதில் ஏற்பட்ட தீ மளமளவென மளமளவென மற்ற பண்டல்களிலும் பரவி மொத்தமாக அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறின .   குடோனில் இருந்து வெடித்து சிதறிய பட்டாசுகளால் அருகில் இருந்த கடை, கண்டெய்னர் லாரி மற்றும் 2 மினி லாரிகளில் இருந்த பட்டாசுகளும் வெடிக்கத் தொடங்கின.  இந்த கோர விபத்தில் குடோனுக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்த 14 இளைஞர்கள்  துடிதுடித்து உடல் கருகி உயிரிழந்தனர். பலர்  படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கடையின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

பட்டாசு குடோன் தீவிபத்து


தர்மபுரி  அம்மாப்பேட்டை வேடப்பன், இளம்பரிதி, ஆதிகேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின், நீட்பத்துறையை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 20 வயதுக்குட்பட்ட 8 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதனால்  அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு  ஒப்படைக்கப்பட்ட உடல்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும்   கதறி அழுதது காண்போரை நெஞ்சங்களை கரைய வைத்தது.  பட்டாசு குடோனில் அவசரகால வழி இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்பதும்,   கடைக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு குடோனுக்கு எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது..

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web