ராணுவவீரர்கள் பயங்கரவாதிகள் மோதலில் 11 ராணுவ வீரர்கள், 19 பயங்கரவாதிகள் பலி!
பாகிஸ்தானில் ஒராக்சாய் மாவட்டம், கைபர் பக்துன்குவாவில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் Vs தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் இடையே மோதல் நடந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது. நேற்று இரவு முழுவதும் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சூட்டில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இதில் 2 மூத்த அதிகாரிகள் லெப்டினண்ட் கர்னல் ஜுனைத் தாரிக் (வயது 39), மேஜர் தய்யிப் ராஹத் (வயது 33) மற்றும் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்தியவர் தடைசெய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

2022ல் TTP, பாகிஸ்தான் அரசுடன் நடந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது. அதற்குப் பிறகு கைபர் பக்துன்குவா, பலூசிஸ்தான் பகுதிகளில் தாக்குதல்கள் அதிகரிப்பு. TTP அமைப்பு பாகிஸ்தானுக்குள் செயல்படுவதில் ஆப்கானிஸ்தானின் அனுசரணை இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல், அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் இந்த சம்பவத்தை தீவிர எச்சரிக்கையாக கருதுகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
