பகீர்... 11 வயது பள்ளி மாணவனை மது குடிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த போதை கும்பல்!
போதையால் இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் தாண்டி தற்போது பள்ளி மாணவர்களிடையே சீரழிந்து வருகின்றனர். அந்த வகையில் ரீல்ஸ் மோகத்தால் பள்ளி சிறுவனை குடிக்க வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தில் விவசாயி ஏழுமலை என்பவரின் 11 வயது சிறுவனுக்கு அதே பகுதியில் 4 இளைஞர்கள் மது குடிப்பது போல் செல்போனில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். சுமங்கலி கிராமத்தில் அம்மன் கோவில் ஆடி மாத திருவிழா நடைபெற்றது
திருவிழாவில் அதே கிராமத்தில் வசித்து வரும் 26 வயது செந்தில்குமார், 25 வயது அஜீத், 21 வயது நவீன் குமார், 17 வயது விஷால் ஆகிய 4 பேரும் கிராமத்தின் அருகே உள்ள அரசு மதுபான கடையில் மது குடித்துவிட்டு கூடுதல் மதுவை கையில் வாங்கிக் கொண்டு வந்தனர். விவசாய நிலத்தில் உல்லாசமாக அமர்ந்து கொண்டிருந்த போது அந்தப் பக்கமாக அதே கிராமத்தில் வசித்து வரும் 11 வயது ஏழுமலை குணாளன் என்ற சிறுவன் சென்று கொண்டிருந்தான். அவனை இவர்கள் 4 பேரும் அழைத்து இந்த பீர்பாட்டிலை குடிக்கிற மாதிரி போஸ் குடுடா ரீல்ஸ் எடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் அங்கிருந்து எழுந்திருந்து ஓட முயற்சித்தார். அவனை கட்டாயப்படுத்தி குடி டா என மிரட்டல் விடுத்துள்ளனர். பயந்து போன சிறுவன் பீர் குடிப்பது போன்று போஸ் கொடுத்துள்ளான்.

இதனை செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ் ஆக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அதனைத்தொடர்ந்து அச்சிறுவன் அவருடைய பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதான். சமூக வலைதளங்களில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தன்னுடைய மகனுக்கு கட்டாய மது குடிப்பது போன்று சமூக வலைதளங்களில் வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அந்த 4 இளைஞர்களையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் 4 பேரும் உண்மையை ஒத்துக் கொண்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைதுசெய்யப்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
