அடகு நிறுவனம் 1½ கிலோ தங்க நகைகள் மோசடி... தூத்துக்குடியில் பரபரப்பு!

 
தங்கம்

ஏரல் பகுதியில் தனியார் நிறுவனம் பொதுமக்கள் அடகு வைத்த சுமார் 1½ கிலோ தங்க நகைகளை மோசடி செய்துவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர், ஏரலில் நகை அடகு கடை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த அடகு கடையில் நகை அடகு வைத்தால், வட்டி எதுவும் இல்லாமல் பணம் தரப்படும் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளம்பரம் செய்து இவரது கடையில் நகை அடகு வைக்க செய்துள்ளனர்.

தங்கம்

இதை நம்பி இந்த அடகு கடையில் ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் நகைகளை ஒரு பவுன் முதல் 15 பவுன் வரை சுமார் ஒன்றரை கிலோ வரை நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நகையை அடகு வைத்த பொதுமக்கள் தங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகையை மீட்க அணுகி உள்ளனர். ஆனால் நகையைத் திருப்பித் தராமல் கடை உரிமையாளர் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்களே தேடி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து ஏரல் போலீசார், சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தங்கம்

இந்நிலையில், நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்து தங்களது நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?