ஜூன்27ல் 11ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியீடு!! மாணவர்களே தயாரா?!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில்  கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. 2021-22 ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டன. 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

 அந்த வகையில் 11ம்  பொது தேர்வு முடிவுகள்  ஜூன்27ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருந்தது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜூன் 27 திங்கட்கிழமை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.தேர்வு முடிவுகளை மாணவர்கள்  http://tnresults.nic.in & http://dge.tn.gov.in என்ற  அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு

இந்த இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் மாணவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். அந்தந்த பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.   தனித்தேர்வர்களை பொறுத்தவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web