விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவர்கள்!

 
வெடிகுண்டு மிரட்டல்


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது  வந்த வண்ணம் இருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலும்  காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்


சென்னை மீனம்பாக்கத்தில் காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து  காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனையாளர்கள் விமான நிலையத்தின் பல்வேறு தளங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இறுதியில் அந்த செய்தி புரளி என உறுதி செய்யப்பட்டது.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

வெடிகுண்டு
தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள 11ம் வகுப்பு மாணவனும், அஸ்தினாபுரத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவனும் இணைந்து இந்த மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை நேரில் வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினர். அத்துடன்  இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!