குடையோடு கிளம்புங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களுக்கு அலெர்ட்...!!

 
rain

தமிழகத்தில்  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று தமிழகம்,   புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும்.

Two Women walked in rain with umbrella

அக்டோபர் 6ம்  நாளையும், மறுநாளும் தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  அக்டோபர்  8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சிலஇடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில்  ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

rain


இந் நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி  என  12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web