அதிர்ச்சி... +2 பொதுத்தேர்வு கணக்கு, உயிரியல் வினாத்தாள்கள் லீக்கானதால் பரபரப்பு!

 
லீக்


இன்று தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கி நடைப்பெற்று வரும் நிலையில், நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கியது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு கணக்கு, உயிரியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் லீக்கானதால் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

தேர்வு
12ம் வகுப்புக்கான வினாத்தாள்கள் நேற்று காலை முதல் உத்தரபிரதேச மாநிலத்தில் வாட்ஸ்-அப் குழுக்களில் வலம் வர துவங்கியது. வினாத்தாள்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் லீக்கானதையடுத்து குறித்து ஆக்ரா மாவட்ட பள்ளி ஆய்வாளர் தினேஷ் குமார் போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினார்கள்.
கல்லூரி முதல்வர் ஒருவரின் 'பிரின்சிபல்ஸ் ஆக்ரா’ எனும் வாட்ஸ்அப் குழுவில் இந்த பாடத்திற்கான வினாத்தாள்கள் வெளியானது கண்டுப்பிடிக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள்  பெரும் அதிர்ச்சியடைந்தனர். 

தேர்வு
ஃபதேபூர் சிக்ரியில் உள்ள ரஜவுலி அதார் சிங் இன்டர் கல்லூரியின் முதல்வர் மீதும், அதே கல்லூரியில் கணினி ஆபரேட்டராக பணிபுரியும் அவரது மகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.வினாத்தாள்கள் லீக்கான விவகாரம் குறித்து விசாரிக்க கல்வித்துறை ஒரு குழுவை அமைத்துள்ளதாக இடைநிலைக் கல்வித்துறை இணை இயக்குநரும், தேர்வுகளுக்கான பார்வையாளருமான முகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web