புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் 125 குழந்தைகள் கண் பாதிப்பு!

 
ரக
 

நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்று சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. இந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க “கால்சியம் கார்பைட்” என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனம் தண்ணீருடன் கலக்கும்போது பெரும் வெடி சத்தத்துடன் “அசிட்டிலின்” வாயு வெளிப்படுகிறது.

இந்த புதிய ரக துப்பாக்கியை பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் மற்றும் பார்வை குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் போபால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் கூறுகையில், அசிட்டிலின் வாயுவை சுவாசிப்பது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் நினைவிழப்பு போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. அதன் பின்னர், அதிகாரிகள் போபாலில் உள்ள பட்டாசு விற்பனை நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அந்த புதிய ரக துப்பாக்கிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!