ஒரே மாசத்துல ரூ1.25 கோடி வசூல்! 100 சவரன் தங்கம் காணிக்கை! களை கட்டும் முருகன் கோயில்!

 
உண்டியல்

ஒரே மாசத்துல சுமார் ரூ.1.25 கோடி திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. சுமார் 100 சவரன் தங்கமும் பக்தர்கள் இந்த ஒரு மாதத்தில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை  வீடாக விளங்குகிறது திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இந்த திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருவது வழக்கம்.

திருத்தணி
அப்படி வந்து குவியும் பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவரான முருகனை தரிசித்து அருளாசி பெற்றுவிட்டு காணிக்கை செலுத்துகின்றனர். மேலும் நேர்த்திக்கடனாக பணம் மற்றும் தங்க நகைகளையும் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியல் வசூலை எண்ணுவதற்காக தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி  திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த 30 உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் எண்ணும் பணி நடந்து முடிந்தது.

அதைத்தொடர்ந்த திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை வசூல் எண்ணும் பணி  கோவில் பணியாளர்களைக் கொண்டு தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்றது. 

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! காரணம் இது தான்!

இதில் ரூ.1 கோடியே 22 லட்சத்து 83 ஆயிரத்து 57 ரொக்கமாகவும், 832 கிராம் தங்கமும், 12 ஆயிரத்து 224 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக வழிபாட்டுக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web