மீண்டும் ஒரு ஸ்ரீமதி சம்பவம்?... 12ம் வகுப்பு மாணவி தற்கொலை... உறவினர்கள் பள்ளியில் மறியல்...!!

 
சுனிதா

விழுப்புரம்  மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி  ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளி. இந்த பள்ளியில்   பிளஸ் 2 மாணவி  ஒருவர் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்."விழுப்புரம் அருகில்  ஒருக்கோடி கிராமத்தில் வசித்து வரும்  பட்டியலின தம்பதி  நேதாஜி, மதினா .  இவர்களது மகள் சுனிதா. விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12ம்   வகுப்பு படித்து வந்தார். மற்றொரு மகன் நரேஷ், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  தமிழகம் முழுவதும் டிசம்பர் 13 ம் தேதி அரையாண்டு தமிழ் தேர்வு நடைபெற்றது. அப்போது சுனிதா  பிட் அடித்ததாகவும், இதைப் பார்த்த பள்ளி ஆசிரியை சௌமியா, பள்ளி முதல்வரிடம் ரிப்போர்ட் செய்துள்ளார்.  

சுனிதா


பள்ளி முதல்வர், மாணவி சுனிதாவின் தந்தை நேதாஜி, தாயார் மதினா இருவரையும்  உடனடியாக  நேரில் பள்ளிக்கு அழைத்து மாணவி செய்த சம்பவத்தை கூறியுள்ளார். அத்துடன் நாளை முதல் இவளை   பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கூறி  பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளார். பள்ளி கேட்டிலேயே  அவரது தந்தை நேதாஜி, 'இப்படி தவறு செய்து  எங்கள அசிங்கப்படுத்திட்டியே' என  மாணவி சுனிதாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.  கண்கலங்கியபடி பெற்றோர்களுடன் வீட்டுக்கு சென்ற மாணவி சுனிதா இரவு சாப்பிடவும் இல்லை .  சரியாக தூங்கவும் இல்லை. யாருடனும் பேசாமல் மௌனமாக இருந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று பிற்பகல் டிசம்பர் 14ம் தேதி  வீட்டில் இருந்த ஃபேனில் துணியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் .  அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்   பகுஜன் கட்சி நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்று நியாயம் கேட்டு போராடி வருகின்றனர்.இதனால் பள்ளிக்குள்ளும், வெளியேவும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் புகார் கொடுங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என புகார் கேட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ்

 மாணவியின் தந்தை நேதாஜி திமுக கிளை செயலாளராக உள்ளார்.தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தரப்பினர் எஸ்சி/எஸ்டி பிரிவிலும், கொலை வழக்கும் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறிவருகிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வரும்  தனியார் பள்ளியில் படித்த ஸ்ரீமதி, ஆகஸ்ட் 13 ம் தேதி, பள்ளி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும்  கலவரமாக மாறி அப்பள்ளி  முழுவதும் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.  அதே போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று விட்டுக்கூடாது என காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.  

பள்ளி நிர்வாகத்தினர், "இந்த பள்ளியில் 2000 மாணவர்கள் படித்து வருகின்றனர், அவர்களை நல் ஒழுக்கமாக திறமையாக உருவாக்க வேண்டும். அவர்களுக்கு  நல்ல கல்வியை கொடுத்து வருகிறோம், பிட் அடித்ததை கேட்பது தவறு என்றால் பள்ளியை எப்படி நடத்துவது" என  கேள்வி எழுப்புகின்றனர்.  அதே நேரத்தில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web