கனிமொழி உட்பட 13 எம்பிக்கள் சஸ்பெண்ட்... தொண்டர்கள் அதிர்ச்சி... !!

 
கனிமொழி

 டிசம்பர் 4ம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 11 வது நாளாக இன்று காலை   அவை கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தில் நேற்று கலர் புகைக்குண்டுகள் வீசியதால் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. இது குறித்து  உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.  எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

கனிமொழி


 முதலில் பிற்பகல் 2 மணி வரை அவை  ஒத்திவைக்கப்பட்டது.  2 மணிக்கு மீண்டும் தொடங்கிய அவையில்    சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக காரணம்  கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்றம்

இந்த உத்தரவை  சபாநாயகர்  ஓம்பிர்லா  பிறப்பித்தார்.  இதனால் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இவர்கள்  அவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.  அத்துடன்  தமிழக எம்பி கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், பி.ஆர்.நடராஜன், எஸ்.ஆர்.பார்த்திபன்  உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவை  நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web