முஸ்லீம் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்துத்துவா அமைப்பினர்.. 15 கட்டிடங்களை இடித்து அட்டூழியம்..!
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவின் போது மும்பையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்ததையடுத்து, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலம், பேரணி நடத்தினர். அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இருவேறு இடங்களில் ஊர்வலம் நடைபெற்றது.
21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நயா நகர் பகுதியில் உள்ள மீரா சாலையில் இந்துத்துவா ஒரு இரவு பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இரவு 11 மணியளவில் இந்துத்துவா அமைப்பினர் முஸ்லிம்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர். மேலும் அவர்கள் ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட ராமர் தொடர்பான கோஷங்களை எழுப்பியதாக தெரிகிறது. அப்போது, போலீசார் அவர்களை தடுத்தபோதும், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. கல் வீச்சு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Unedited raw footage from the view of a 3rd person in regards to an incident at Andheri west Millat nagar, PLS NOTE THIS WAS LAST NIGHT AND ISSUE HAS BEEN RESOLVED,only reason for sharing is to show proof.@Delhiite_ @ShaikhTabii @drunkJournalist pic.twitter.com/ozEWA9wFHB
— Rizwan Ashraffi (@rizwanace) January 22, 2024
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பதற்றமான சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் 15 கட்டிடங்களை இடித்துள்ளனர். ஒரு நாள் நடந்த வன்முறை புகாரின் அடிப்படையில் பல ஆண்டுகளாக நிற்கும் கட்டிடங்கள் திட்டமிட்டு இடிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இரவு மிரா ரோடு பகுதியில் வன்முறை நடந்த நிலையில், மறுநாள் அதாவது 22ம் தேதி காலை பனாவல் பகுதி காச்சி மொஹல்லா பகுதியில் இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி இருசக்கர பேரணியில் சென்றனர். . இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கல் வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 3 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
Reports suggest Hindus of Mumbai have retaliated against those who were doing stone pelting on them.
— Mr Sinha (@MrSinha_) January 23, 2024
Good, be united & make your own efforts as well.. We are more in numbers so nobody will dare to do such things if we are united... pic.twitter.com/L0hctaugiE
பனாவல் பகுதி மற்றும் மீரா ரோடு பகுதியில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒருவர், கல்லெறிவோருக்கு எதிராக இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதாக தெரிகிறது. நல்ல விஷயம், ஒற்றுமையாக இருங்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நாங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது.
அவரது பதிவை மேற்கோள்காட்டி மற்றொருவர், “சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் இதுபோன்ற பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எத்தனை நாட்கள் அமைதியாக இருப்பீர்கள்?” என்று பதிவிட்டுள்ளார். மீரா ரோடு மற்றும் பனாவல் பகுதிகளில் நடந்த கலவரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை பலராலும் விமர்சிக்கப்பட்டது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க