நவம்பர் 1 முதல் சீனப்பொருட்களுக்கு 130% வரி... ட்ரம்ப் அடுத்த அதிரடி!

 
சீனா அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் நவம்பர் 1 முதல் 100 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், ஏற்கனவே அமலில் உள்ள 30 சதவீத வரியுடன் சேர்ந்து, மொத்தமாக 130 சதவீத வரி சீனப் பொருட்களுக்கு விதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

ட்ரம்ப்

மேலும், முக்கியமான அனைத்து மென்பொருட்களுக்கும் நவம்பர் 1 முதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமலில் வரும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது, சீனா தனது வர்த்தக நடவடிக்கைகளில் எடுத்துள்ள "அசாதாரணமான மற்றும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டுக்கு" அமெரிக்காவின் கடும் பதிலடி என்று அவர் குறிப்பிட்டார். டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

90 நாட்களுக்கு கூடுதல் வரி நிறுத்தம்...  அமெரிக்கா – சீனா கூட்டறிக்கை!

இதேவேளை, சீனாவின் நிலைப்பாடு சர்வதேச வர்த்தக ஒழுங்கமைப்புகளுக்கு எதிரானதாகவும், அது "தார்மீக அவமானம்" என்றும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அதனுடன், சீனாவை எதிர்த்து அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் சேர்ந்து வர்த்தகத்திலும் பாதுகாப்பிலும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் பின்னணியில், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஜி ஜின்பிங்குடன் அவருடைய சந்திப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?