13,000 ஊழியர்கள் பணிநீக்கம் ... பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

 
பணி நீக்கம் வேலை ஊழியர்கள்

கொரோனா காலத்திற்கு பின்னர் பல நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பல ஊழியர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக போஸ் நிறுவனம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

ஜெர்மனியைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனம் போஸ். இந்நிறுவனம்  உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமாக கருதப்படுகிறது. தற்போது போஸ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.  அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கியிருப்பவா்களுக்கு பிறப்பின் அடிப்படையில் அளிக்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது, சட்டவிரோத குடியேற்றவாசிகளை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, கூடுதல் வரிவிதிப்பு என  அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாா்.

இதனிடையே உலகளாவிய வர்த்தக சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழலால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில்  முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டெஸ்லா, பிஒய்டி  நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிகைகளில் ஈடுபட்டது.
அந்த வரிசையில் தற்போது  உலகின் முன்னணி வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனமான போஸ், தனது பணியாளர்களில், 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு, இதனால் வாகன உற்பத்தி குறைவு, வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தமான சூழல் போன்ற காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் கிளைகளில் இருந்து சுமார் 13,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் வாகன சந்தையில் தேவைகள் குறைவு, டிரம்பின் கூடுதல் வரி விதிப்புகளால் ஏற்படும் அதிக செலவுகளை ஈடுகட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "இந்த முடிவு எங்களுக்கு மிகவும் வேதனையானது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு வழி இல்லை." எனக் கூறியுள்ளது.

உலக அளவில் போஸ் நிறுவனத்தில் சுமார் 4,18,000 பணியாளர்கள் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு  அமேசான், ட்விட்டர், ஸ்விக்கி, டெஸ்லா, பிஒய்டி  நிறுவனங்கள் ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.  இந்த வரிசையில் தற்போது போஸ் இணைந்துள்ளது

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?