செம... ஐந்தே நாட்களில் 1327 பேர் உடல் தானப்பதிவு... !!

 
உடல் உறுப்பு தானம்

தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவருக்கு அரசு மரியாதையுடன்  இறுதிச்சடங்கு நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும்வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த  அறிவிப்பினைத் தொடர்ந்து ஐந்து நாட்களில் 1377 பேர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர்.  

 

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை


விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலமாக குறைந்தது 5 பேரின் உயிரைக் காக்கலாம் . இதன் மூலம்   அவர்கள் மறுவாழ்வு பெறுகிறார்கள்.    தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முண்ணனியில் இருந்து வருகிறது.  இந்நிலையில் உடல் உறுப்புகளைத் தானம் செய்பவரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என செப்டம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது.  

உறுப்பு தானம்

அப்படி தானம் செய்த ஒருவருக்கு இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டன. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.  செப்டம்பர் 23 முதல் 27 வரை  உள்ள 5 நாட்களில் 1327 பேர் தங்களுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு முன் வந்து அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.   அரசின் முன்னெடுப்புக்கு கிடைத்த நல்ல விளைவு என சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web