13331 நிரந்தர ஆசிரியர் நியமனம்?!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

 
ஆசிரியர் நீதிமன்றம்


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக  உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்  அடங்கிய பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும்  பணிநியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

ஆசிரியர்கள்
இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஏற்கனவே TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது வரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு பிறகு தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து தமிழக அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

ஆசிரியர்கள்
இதனையடுத்து தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு முறையீடு செய்தது. இடைக்கால தடையால் மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியவில்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்து. மேலும்,நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே?  தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு ஜூலை 8 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web