குடை எடுத்திட்டு கிளம்புங்க... 15 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்...!!

 
வெயில் , மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்பே மழைக்காலம் தொடங்கியதின் அறிகுறியாக பரவலாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது  இந்த மழை செப்டம்பர் 27ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

மழை

இதன் காரணமாக, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

அதன்படி   சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், மதுரை  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 23 ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

மழை

நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.  செப்டம்பர் 24 முதல் செப்டம்பர் 26 வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். செப்டம்பர் 27ம் தேதி தமிழகம் புதுவை   காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web