15 மாவட்டங்களில் மிரட்டப்போகும் கனமழை...!!

 
இடி மின்னல் மழை

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று 15 மாவட்டங்களில் கனமழை மிரட்டப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, தென்காசி, நாகப்பட்டினம், அரியலூர், கன்னியாகுமரி , கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருவாரூர் , நாமக்கல் மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.நேற்று கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.  அந்த வகையில் நேற்றும் சென்னையின் பல  இடங்களில் மழை பெய்தது. அதிலும் சென்னையில் ஓரிரு இடங்களில் ஐஸ் கட்டி மழை பெய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இடி மின்னல் மழை

 அத்துடன் தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்  மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மழை

இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web