ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

 
அபின்
 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை ஆற்றில் குளித்த 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

திருவனந்தபுரம், கொடுங்கனூர் சிவாஜி லைன் பகுதியில் வசித்து வரும் தம்பதியர் சஜித்குமார், அனிதா. இவர்களது மகன் அபின் (15) கேந்திரிய வித்யாலயாவில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

பள்ளி முடிந்து மாலை நேரத்தில் குலசேகரம் பாலம் அருகே தனது நன்பர்களுடன் ஆற்றங்கரைக்கு சென்ற அபின், ஆற்றில் நீந்துவதற்காக தனியாக ஆற்றில் குதித்துள்ளார். பின் ஆற்றின் ஆழத்தில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அபாய குரல் எழுப்பியுள்ளார். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், இரவு வெகுநேரம் வரை தேடியும் உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு 8 மணியளவில் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் மீண்டும் தேடுதல் பணி ஆரம்பிக்கப்பட்டு, காலை 7.30 மணியளவில் அபினின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!