நாளை 150 கூடுதல் சிறப்பு பேருந்துகள்...!

 
பேருந்து

 சென்னையில் நாளை பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து தாம்பரம் முதல் சென்னை கடற்கரை  வழித்தடத்தில்  கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.   பயணிகள் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பேருந்து ரயில், மெட்ரோ

ரயில் சேவை ரத்து செய்யப்படுவதை அடுத்து   மாநகர பேருந்துகளை நாளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ தெற்கு ரயில்வே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும்.  

பேருந்து

ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் . குறிப்பாக  தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!