மரண ஓலம்... அள்ள அள்ள சடலங்கள்... எத்தியோப்பியா நிலச்சரிவில் சிக்கி 157 பேர் பலி... பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்!

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு எத்தியோப்பியாவின் ஜிஸி கோஃபா மாவட்டத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது என்று மாநிலத்துடன் இணைந்த ஃபனா பிராட்காஸ்டிங் கார்ப்பரேட் தெரிவித்துள்ளது.
Video: Ethiopia extreme weather: At least 157 people killed after two landslides https://t.co/nGeQ5CTW9e #LiveTube
— LiveTube Alerts (@livetubealerts) July 23, 2024
இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் இதுவரை மீட்கப்பட்ட சலங்களில் 96 ஆண்களும் 50 பெண்களும் மீதி குழந்தைகளுமாக அடங்குவர் என்று கோஃபா மண்டல அரசாங்க தகவல் தொடர்பு விவகாரத் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியா ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்தின் மத்தியில் உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் சில பகுதிபெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 55க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்ட முதன்மை நிர்வாகி மிசிகிர் மிட்டிகு கூறுகையில், மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா