பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 2 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!!

 
விபத்து

தெற்கு மெக்சிகோவில் ஓஸாக்காவில் இருந்து டெபெல் மேம் நகருக்கு பேருந்து ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் நேற்று   சென்று கொண்டிருந்தது. அப்போது அண்டை மாநில எல்லையான டெபெல்மேம் நகர் எல்லையில்  பேருந்து கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்திற்குள் பாய்ந்தது.  இந்த கோர விபத்தில்  2 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

இவர்கள் வெனிசுலா மற்றும் ஹைட்டியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அத்துடன்  29 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அமெரிக்க எல்லைக்கு செல்லும் புலம்பெயர்ந்தவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி   உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

விபத்து

கடந்த வாரம் குவாத்தமாலாவின் எல்லைக்கு அருகே அண்டை மாநிலமான சியாபாஸ் நெடுஞ்சாலையில் சென்ற சரக்கு லாரி மோதியதில் கியூபாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பெண்கள்.   27 புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற டிரக் அதிவேகமாக சென்றதால் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web