அம்மாடியோவ்.. ஒரே நேரத்தில் வள்ளிக்கும்மி ஆடிய 16,000 பெண்கள்.. கொ.ம.தே.க மாநாட்டில் கின்னஸ் சாதனை.!

 
வள்ளிக்கும்மியாட்டம்

 இந்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பலத்தை நிரூபிக்க கட்சி கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் மேற்கு மண்டலம் என்று அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பிரதான கட்சியாக உள்ளது. தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ள இக்கட்சி, வரும் 12ம் தேதி, தி.மு.க.,வின் தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளது.


இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கட்சியின் சார்பில் கொங்கு மண்டல மாநாடு நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வள்ளிக்கும்மியாட்டம் என்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக அறியப்படும் இதன் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் மீண்டும் எழுந்துள்ளது. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வல்லிக் கும்மியாட்டம் என்ற இந்த நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், நாமக்கல், சேலம், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 16,000 பெண்கள் நடனமாடி அசத்தினர். அப்போது வள்ளி முருகன் திருமணத்தை குறிக்கும் விதமாக கும்மியாட்ட கலை ஆசிரியர்கள் பாடிய நாட்டுப்புற பாடல்களுக்கு பெண்கள் சந்தனம், சிவப்பு, பச்சை நிற சீருடைகள் அணிந்து கும்மியடித்து நடனமாடினர்.

ஒரே நேரத்தில் 16,000 பேர் நாட்டுப்புற கலையில் ஈடுபட்ட இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த வள்ளிகும்மியாட்டம் கின்னஸ் சாதனையை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

 
From around the web