தீபாவளிக்கு 16500 சிறப்பு பேருந்துகள்... முன்பதிவு தொடக்கம்!

 
சிறப்பு பேருந்துகள்


 
அக்டோபர் 31ம் தேதி தீபாவளிப் பண்டிகை  கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் தமிழக அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில்  தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 16, 500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பேருந்துகள்

இது குறித்து நாளை மறுநாள் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.அந்த கூட்டம் முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது .  

அரசு பேருந்துகள்

சென்னையில் மட்டும் 10,500 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. சுமார் 5.5 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளதாக  போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!