அதிர்ச்சி... பயங்கரவாதிகள் தாக்கியதில் 167 பேர் பலி!!

 
எத்தியோபியா

சோமாலியாவில்  பயங்கரவாத அமைப்பு ஒன்று ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இவர்களை கட்டுப்படுத்த ஒடுக்க சோமாலியா அரசு பல்வேறு தடுப்பு முறைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி கடுமையான மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால்  இரு தரப்பிலும் பெருமளவில் உயிர் சேதம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


 
சோமாலியா அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு  எத்தியோப்பியா மற்றும் உகாண்டா ராணுவம் இரண்டும்  துணை புரிந்து வருகின்றன. அந்த வகையில் சோமாலியாவின் மேற்குப் பகுதிகளில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் முகாமிட்டுள்ளது.  இதன் பேரில்  எத்தியோப்பிய வீரர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

எத்தியோபியா

அந்த சமயத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் மறைவிடத்தில் இருந்து எத்தியோப்பியா ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். திடீரென நேர்ந்த இந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல்   சிக்கி  எத்தியோப்பியாவின் 167 ராணுவ வீரர்கள்  பலியாகினர்.  தங்களுக்கு உதவி புரிய  வந்த எத்தியோப்பியா நாட்டு வீரர்கள் பயங்கரவாத தாக்குதலில் பலியாகி இருப்பது சோமாலியா அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை