கதறும் கேரளா... மாவட்டத்தில் பள்ளிகள், திரையரங்குகள் மூடல், மாஸ்க் கட்டாயம்.. கடுமையான கட்டுப்பாடுகள் | 175 பேர் கண்காணிக்கப்படுகிறார்கள்!

 
மருத்துவமனை
 

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 40 பேருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞர் திருவாலியில் உயிரிழந்ததை அடுத்து, மலப்புரம் மாவட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.

மருத்துவமனை

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பேட் மற்றும் திருவாலியில் கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவாலியில் நிபா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், திருவாலியில் 49 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் தொடர்பு பட்டியலில் இருந்துள்ளவர். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது உயிரிழந்தவருடன் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ள நிலையில், 175 பேரும் கண்காணிப்பு பட்டியலில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

மலப்புரம் மாவட்டத்தில், குறிப்பாக திருவாலி மற்றும் மாம்பாடு பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டு மண்டல வார்டுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. பெங்களுருவில் உள்ள மாணவன், பெரிந்தல்மன்னா எம்இஎஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செப்டம்பர் 9ம் தேதி காலை 8:30 மணியளவில் உயிரிழந்தார். மூளைக் காய்ச்சலின் அறிகுறிகளைத் தொடர்ந்து மருத்துவ அதிகாரி நடத்திய விசாரணையில் நிபா வைரஸ் இறப்பு சந்தேகிக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட மருத்துவ அதிகாரி மூலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு மாதிரி அனுப்பப்பட்டது. சனிக்கிழமை மாலை வந்த பரிசோதனை முடிவு நேர்மறையாக இருந்தது. 

மருத்துவமனை

இதன் எதிரொலியாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மறு உத்தரவு வரும் வரையில் திரையரங்கங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மதரஸாக்கள், அங்கன்வாடி, டியூஷன் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.மாவட்டம் முழுவதும் மாஸ் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை