18 வருஷங்களாச்சு... இன்னும் சொன்ன வார்த்தைய காப்பாத்தலை?! நடிகை நக்மா அதிருப்தி!

 
நக்மா

ஊர் ஒன்று கூடி தேர் இழுத்தால் தானே அது திருவிழா? தமிழ்நாட்டில் தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களை விட கோஷ்டி பூசல்கள் அதிகமிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நாட்டின் பல மாநிலங்களில் காங்கிரஸ் கோஷ்டி பூசல் இருக்கும் போல. சமீபத்தில், பஞ்சாப் தேர்தலுக்கு முன்னர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். இங்கே பாண்டிசேரியிலும் கூட நாராயணசாமிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். இப்போது நடிகை நக்மா முறை. நான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 18 வருஷங்களாச்சு. கட்சியில் சேர்க்கும் போது, மாநிலங்கவை பதவி தரப்படும் என்றர்கள்.  இந்த 18 வருடங்களில் என்னை இன்னும் அவர்கள் தகுதியானவளாகப் பார்க்கவில்லை போல? என தனது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார் நக்மா.  நாடு முழுவதும் 57 மாநிலங்களவை எம்பிக்களின் பதவி வரும் ஜூன் 22-ம் தேதி முடிகிறது. இதற்கான தேர்தல் வருகிற ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைகிறது. 

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சிகளும், தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வந்தன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். 

நக்மா

இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து ராஜீவ் சுக்லா, ரன்ஜீட் ரஞ்சன், ஹரியானா மாநிலத்தில் இருந்து அஜய் மக்கான், கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் இருந்து விவேக் தன்கா, மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து இம்ரான் பிரதாப் கார்ஹி, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி, தமிழ்நாட்டிலிருந்து ப.சிதம்பரம் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இடம் பெறாதது குறித்து நக்மா ட்விட்டரில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “தனக்கு ஏன் மாநிலங்களவை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கட்சியில் இணைந்த போது, மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியா காந்தி உறுதி அளித்திருந்தார். கட்சியில் இணைந்து 18 ஆண்டுகளாகியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மகாராஷ்டிராவில் இருந்து தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ள இம்ரானை விட எனக்கு எந்த விதத்தில் தகுதி குறைச்சல். மாநிலங்களவை வாய்ப்புக்கு எனக்கு தகுதி இல்லையா?” என நக்மா அதிருப்தியோடு கேள்வியெழுப்பிருந்தார்.


மஹாராஷ்டிராவில், ராஜஸ்தானைச் சேர்ந்த இம்ரானுக்கு வாய்ப்பளித்ததால் தான் நக்மா இப்படி ட்வீட் செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழகத்திலிருந்து போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web