10, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்... அதிரடி அறிவிப்பு!

 
சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ முறைப்படி கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி   10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு  2  முறை நடத்தப்படும்   மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதிக் கொள்ளலாம் எனவும்  மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. 

சிபிஎஸ்இ
மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும்  அறிவித்திருந்தது.  தேர்வு குறித்த மாணவர்களின் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக   விளக்கம் அளிக்கப்பட்டது. 
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்   10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை எழுத அனுமதிக்கும் திட்டம் வரும் 2025 – 26ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.  ஒரு தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் இன்னொரு தரப்பினர் ஆண்டுக்கு 2  முறை தேர்வு எப்படி எழுதுவது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

சி.பி.எஸ்.இ
ஆனாலும் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும்  2 முறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை . 2  முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web