பள்ளி, கல்லூரி, உச்சநீதிமன்றத்துக்கும் 2 நாட்கள் விடுமுறை!!

 
ஜி20

இந்தியா ஜி 20 அமைப்பு மாநாட்டுக்கு நடப்பாண்டு   தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் மாநாடுகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பல்வேறு நாட்டின் அதிபர்கள் இந்தியா வருகை தர உள்ளனர்.  இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்திற்கு  செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.  

தலைநகர் டெல்லியில், ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி உச்சநீதி மன்றத்துக்கும் 2 நாள் விடுமுறைஅறிவிக்கப்பட்டு உள்ளது. தலைநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2022 நவம்பரில் நடைபெற்ற  ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியா தலைநகர் பாலி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதியில் ஜி-20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஜி20 மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகம் உட்பட  முக்கிய நகரங்களில்  நடைபெற்று வந்தன.  வெளியுறவுத் துறை, பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை என 32 துறைகள்  குறித்து இதுவரை 200 கூட்டங்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசு நடத்தி உள்ளது.

ஜி20


இதன்   மாநாடு தலைநகா் டில்லியில் வரும் செப்டம்பர் 9, 10 தேதிகளில் நடைபெற உள்ளது.    இதனால் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மிக பிரம்மாண்டமாக, மிகுந்த பாதுகாப்புடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட தினங்களில் தலைநகரில்  பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்,  பள்ளி கல்லூரிகள், நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து  மாநில அரசின் தலைமை செயலாளர்  தலைநகரில் செப்டம்பர் 8   முதல் 10 வரை ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி   கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு  3  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது    

ஜி20

அந்த நாட்களில் உச்சநீதிமன்றத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.    இதனை முன்னிட்டு சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.  பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இது குறித்து சமூக வலைதளங்களில் புரளி பரப்புபவர்களை தடுக்கும் வகையில்  பல குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. ஜி20 பாதுகாப்பு பணியில் காவல்துறையின் சுமார் 60 துணை ஆணையர்கள் அமர்த்தப்பட உள்ளனர்.  இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  அத்துடன்  விக்ராந்த் சிறப்பு வாகனங்களும் தயார்நிலையில் வைக்கப்படும். அந்த நாட்களில்  போக்குவரத்து மாற்றங்களும்  அறிவிக்கப்பட உள்ளன. டெல்லி எல்லைகள் ‘சீல்’ செய்யப்பட்டு அத்தியாவசிய தேவை அடிப்படையில் மட்டுமே  அனுமதி அளிக்கப்படும். மக்கள் அதிகம் கூடும் மால்கள், திரையரங்குகள், புனிதத் தலங்கள், மார்க்கெட்டுகள், தங்கும் விடுதிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில்  கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்” என அறிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web