கண்டெய்னர் லாரி மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபப் பலி!!

 
சேலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை மலைப்பகுதியில் தக்காளி விவசாயம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்கு விலையும் தக்காளிகளை அறுவடை செய்யும் மலைவாழ்மக்கள் அதனை பிக்கப்வேனில் ஏற்றிக்கொண்டு தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வருகின்றனர். இந்நிலையில் தற்போது அறுவடை செய்த தக்காளிகளை பிக்கப்வேனில் ஏற்றிக்கொண்டு தலைவாசல் தினசரி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளனர்.  

பலி

அப்போது மணிவிழுந்தான் என்னும் இடத்தில் சென்னை- சேலம்  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேனின் முன்பக்க டயர் வெடித்துள்ளது.  இதனையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திய ஓட்டுநர் இளங்கோ டயரை கழற்றிமாட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சேலத்தில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த பிக்கப் வேனின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

பலி

இந்த விபத்தில் வேனின்பின்பக்கம்  நின்றுகொண்டிருந்த கருமந்துறை அருணாகிராமத்தை சேர்ந்த சின்னசாமி, ராமசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  பின்னர் இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தலைவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் கண்டெயர் லாரியின் ஓட்டுனர் சுடலை முத்துவை கைதுசெய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.  ஒரே கிராமத்தை சேர்ந்த இருவர் சாலைவிபத்தில் பலியான இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web