சோகம்... பைக் மீது வேன் மோதி 2 நண்பர்கள் உயிரிழப்பு!

 
விபத்து
 

தமிழகத்தில் சங்கரன்கோவில் அருகே பைக் மீது வேன் மோதி 2 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் மகன் காளீஸ்வரன் (25), கோவிந்தராஜ் மகன் மாரிமுத்து (28). நண்பர்களான இவர்கள் 2 பேரும் தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்கு தங்களது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். 

ஆம்புலன்ஸ்

பின்னர் விழா முடிந்து மாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் சோலைசேரி பகுதியில்  எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கர வேகத்தில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட காளீஸ்வரன், மாரிமுத்து ஆகிய இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு விழுந்தனர். 

உத்தரபிரதேச போலீஸ்

உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அடுத்தடுத்து 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தர்மரிடம் (50) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web