மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!!

 
சிறுமி

திருநெல்வேலி மாவட்டம் அரசு மருத்துவமனையில் சுப்ரியா என்ற 8 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுமி சுப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த சொரிமுத்து என்பவரின் மகளான பூமிகா என்ற 6 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக நெல்லை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதாரத்துறை

இவர்கள் மட்டுமல்லாமல் காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடுத்தடுத்து பலருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.காசிநாதபுரம் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்த 42 வயதான மாரியம்மாள், சந்துரு, ரோகித், லாவண்யா, சிவராஜேஷ், சிவசக்தி உட்பட 14 பேர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர் எனக் கூறப்படுகிறது. இவர்களில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யபட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.

சுகாதாரத்துறை

‘வாசுதேவநல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் தேக்கி வைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. எனவேதான் மக்கள் நோய் வாய்ப்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் காசிநாதபுரத்தில் பகுதியில் முகாம் அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மக்களின குறைகள் கேட்கப்பட்டு வருகின்றன. அப்பகுதியில் 2 சிறுமிகள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web