சோகத்தில் மூழ்கிய கிராமம்... மோட்டார் சைக்கிளில் மின்கம்பி உரசி 2 பேர் பலி.. !!

 
ரமேஷ் ராவணையா

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  சின்னப்புலியூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ், ரமணய்யா. இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து  மரங்களை வெட்டி அதனை கடைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். வழக்கம் போல் இன்று காலை  ரமேஷ் வேலைக்காக ரமணய்யாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு  தைலம் மர தோட்டத்திற்கு மரத்தைப் பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு உள்ள வயல்வெளிக்கு சென்ற போது  மின்கம்பத்தில் இருந்து மின்வயர் அறுந்து கிடந்தது.
இதனை கவனிக்காமல் அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.  

மின்சாரம்

ரமேஷ், ரமணய்யா சென்ற மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் மின்கம்பி சிக்கி மின்சாரம் பாய்ந்தது. இதில் ராவணைய்யா உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமேஷ், சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் மின்வாரிய அதிகாரிகளுக்கும்,  தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராவணைய்யா உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  நேற்று இரவு கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் காற்றுடன் மழை பெய்து இருக்கிறது. 

ஆம்புலன்ஸ்

இந்த நிலையில் அதிகாலை மின்கம்பத்தில் இருந்த மின்வயர் அறுந்து விழுந்து உள்ளது. இதனை கவனிக்காமல் சென்றபோது அதில் சிக்கி ரமேசும், ரமணய்யாவும் பலியாகி விட்டனர்.
இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்களில் உள்ள வயர்கள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அதனை சரிபார்த்து மாற்ற வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!