வாகன விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு 2 லட்சம் நிதியுதவி !! முதல்வர் அறிவிப்பு!!

 
ராணுவ வாகனம்

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் ராவ்லி கல்யாண்பூர் கிராமத்தில் பரத்குப் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வீட்டில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்கு விருந்தினர்கள், நண்பர்கள் என அனைவரும் அவரது வீட்டில் குவிந்தனர்.

அப்போது திருமணத்தில் கொள்ள வந்திருந்தவர்களில் பலர் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த சாலையில் வாகனம் வந்து அந்த பக்கமாக வந்தது. திடீரென்று அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையில் தறிகெட்டு ஓடியது.

விபத்து

இதில் அங்கு அமர்ந்து இருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிதுடித்தனர். போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யோகி ஆத்தியானந்த்

இந்த பயங்கரமாக விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச மாநில -முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். மேலும் கார் மோதிய விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அடைந்த 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் காரை ஓட்டி வந்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் கூறியுள்ளார். திருமண நிகழ்ச்சி கடைசியில் துக்க நிகழ்ச்சியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web