அதிர்ச்சி... 11 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய 2 உயிருள்ள மீன்கள்!

 
தொண்டையில் மீன்

கர்நாடகா மாநிலம் கஞ்சேனஹள்ளியில் வசித்து வரும் தம்பதி  யோகேஷ் - ரோஜா .இவர்களின் குழந்தைக்கு 11 மாதங்கள் ஆகின்றன. குழந்தை அழுது கொண்டே இருந்ததால் அதற்கு விளையாட்டு காட்ட குழந்தையின் பாட்டி தொட்டியில் உள்ள மீன்களை கையில் பிடித்து விளையாட்டு காட்டியுள்ளார்.  

மீன்கள்

திடீரென   பாட்டியின் கையை குழந்தை தட்டிவிட்டதால்   கையில் இருந்த மீன்கள் குழந்தையின் வாயில் விழுந்து தொண்டைக்குள் சிக்கிக்கொண்டன. இதன் காரணமாக குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியது. அலறித் துடித்தபடி உடனடியாக குழந்தையை அருகில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.  குழந்தைக்கு முதலுதவி அளித்து  குழந்தையை மருத்துவர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

மீன்கள்

அங்குள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்த போது தொண்டையில் 10 செ.மீ நீளமுள்ள இரண்டு மீன்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் மீன்கள் அகற்றப்பட்டன.  இந்நிலையில் சிகிச்சைக்கு பிறகு தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாக பெற்றோர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web