2 லாரிகள் மோதி கோர விபத்து; 2 பேர் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதி கொண்ட கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற டாராஸ் லாரி மீது மூட்டை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த கனரக லாரி மோதி விபத்துக்குள்ளனாது.

இந்த விபத்தில் மூட்டைகளை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த லாரியில் லிஃப்ட் கேட்டு ஏறிச் சென்ற சாந்தி (50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
