2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா... பீகார் அரசியலில் பரபரப்பு!

 
பீகார்

பீகாரில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் – சங்கீதா குமாரி மற்றும் சேதன் ஆனந்த் – தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை தொடர்ந்து, மோகனியா மற்றும் ஷியோஹர் தொகுதிகள் தற்போது காலியாகிவிட்டன என்று பிகார் சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்துள்ளது.

பீகார்

இந்த இரு எம்எல்ஏக்களும் விரைவில் பாஜகவில் இணையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை தங்களது ராஜினாமா குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. இது, தேர்தல் சூழ்நிலையிலும் கட்சி அரசியலிலும் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பீகார்

பிகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகள் கொண்ட மகாகட்பந்தனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?