உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!!

 
உயர்நீதிமன்றம்

நடப்பாண்டிலும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைக்கு, மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. ஒவ்வொரு வாரத்திலும் மூன்று நாட்கள் என, ஐந்து வாரங்கள் செயல்பட்டு வந்தன. விடுமுறை காலகட்டத்தில் சென்னையில் 20 நீதிபதிகளும், மதுரையில் 15 நீதிபதிகளும் வழக்குகளை விசாரித்து வந்தனர்.சுந்தர் மோகன், குமரேஷ் பாபு சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதற்கான பதவியேற்பு விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. 

உயர்நீதிமன்றம்
இந்த விழாவுக்கு தலைமையேற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை முனீஷ்வர்நாத் பண்டாரி, சுந்தர் மோகன், குமரேஷ் பாபு ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவர்கள் பதவியேற்புக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டில் உள்ள மொத்த  நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 58 -ஆக உயர்ந்துள்ளது.இதற்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் சென்னை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதிகளாக இருந்து வந்த 8 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்து இருந்தது. 

உயர்நீதிமன்றம் தமிழக அரசு
இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர்கள் அனைவரும் கடந்த 2020 டிசம்பர் 3 முதல் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web