2பயணிகள் விமானங்கள் நேர் நேர் மோதி விபத்து.. !

 
flight accident

சமீப காலமாக விமான பயணங்களில்  பெரும் சர்ச்சைகள் உருவாகி  விமானப் பயணிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது.  அந்த வகையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில்   பயணிகள் விமானம் தரையிறங்கி கொண்டிருந்தது. அப்போது  ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கடலோர பாதுகாப்பு விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் 5 பேர் பலியாகினர்.அதே போல் ஜனவரி 16ம் தேதி  ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் உள்ள நியூ சிந்தோஸ் விமான நிலையத்தில் தென்கொரியா நாட்டிற்கு சொந்தமான விமானம் ஒன்று கேத்தே பசிபிக் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்துடன் மோதி பரபரப்பை ஏற்படுத்தியது.  

flight accident

இந்நிலையில் ஜப்பானில் மீண்டும் விமான விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பானில்  ஹோன்சு தீவின் கன்சாய் பிராந்தியத்தில்  வடக்கு ஒசாகாவில் இடாமி சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.  இங்கிருந்து  உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.இடாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு முனையத்தில் ஆல் நிப்பான் ஏர்வேஸ்  நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.  அதன்படி  இடாமியில் இருந்து மட்சுயமா நகருக்கு செல்வதற்கு  விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பாடுக்கு தயாராகி கொண்டிருந்தது.அதே நேரத்தில்  புகுவோகாவில் இருந்து புறப்பட்டு வந்த மற்றொரு ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம்   இடாமி விமான நிலையத்தில் தரை இறங்கிக் கொண்டிருந்தது.  

டெல்லி விமான நிலையம்

ஏற்கனவே  ஓடுபாதையில் புறப்பாடுக்காக நின்று கொண்டிருந்த பயணிகள் விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விமான கட்டுப்பாட்டு அறையின் தவறான சமிக்ஞைகளால் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த விபத்தில் இரு விமானங்களில் முன்பக்க இறக்கைகள் சேதம் அடைந்தன .விபத்துக்குள்ளான இரு விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அத்துடன்  இடாமி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்து.   இந்த விபத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web