பைக்கில் ட்ரிப்ள்ஸ் சென்ற போது சுவற்றில் மோதி 2 பேர் பலி!! ஒருவர் கவலைக்கிடம்!!

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மஞ்சாடி பகுதியில் வசித்து வருபவர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் . இவரது நண்பர்கள் கிழக்கே பரம்பில் வீடு பகுதியில் வசித்து வரும் ஆசிப் அர்ஷத் , அருண் 3 பேரும் தங்களுடைய நண்பரின் திருமணத்திற்காக நேற்று வெளியூருக்கு சென்றிருந்தனர். திருமணம் நிறைவடைந்ததும் 3 பேரும் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
எர்ணாகுளம் மாவட்டம் கச்சேரிப்பாடி பகுதியில் இன்று அதிகாலை வந்த போது, அங்கிருந்த சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனை நேரில் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இந்த விபத்தில் விஷ்ணு உன்னி கிருஷ்ணன் மற்றும் ஆசிப் அர்ஷத் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்த அருணை, மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!