காரில் வந்தவர்களிடம் கத்தியை காட்டி நகை கொள்ளை.. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்..!

 
பூங்கொடி கிராமம்

புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் பைபாஸ் சாலையில் காரில் வந்தனர். புதுக்கோட்டை அருகே ஆண்டகளூர் பகுதியில் வந்தபோது, ​​2 பேர்  காரை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச் சென்றனர். அப்போது அங்கு சுமார் 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களிடம் கத்திகள் மற்றும் அரிவாள்கள் இருந்தன.

புதுக்கோட்டை: நியூ டைமென்ட் நகர் வடக்கு பூங்கா தெருவை சேர்ந்த கணவர்  மாயமானதாக மனைவி காவல் நிலையத்தில் புகார்|Inshorts

திடீரென செந்தில் மற்றும் சீனிவாசனை ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த 13 பவுன் நகைகளை பறித்தனர். பின்னர் 2 மணி நேரத்திற்கும் மேலாக கட்டி வைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் இருவரும் புதுக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கொள்ளை கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்திய மக்கள்

இதனிடையே, கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்கள் குறித்து அவர்கள் அளித்த துப்புகளின் அடிப்படையில் போலீசார் அந்த கும்பலை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web