விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 
ஸ்டாலின்

விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்த 2 போலீசார், இன்னொரு வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 போலீஸ்காரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலியான 2 போலீஸ்காரர்களான தேவராஜன் (வயது 37) , சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் (55) ஆகியோர் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தததுடன், அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


விபத்து குறித்து விசாரணை நடத்தச் சென்ற 2 போலீஸ்காரர்கள் விபத்தில் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 மாதங்களாக நாமக்கல் & சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு அருகே  நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்கப் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

போலீசார் பலி
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற காரை ஓட்டி வந்த அரியநாயகம் என்பவர் அதனை தடுப்பு தகரத்தின் அதிபயங்கரமாக மோதி நிறுத்தினார். ஏனெனில் அப்பகுதியில் பாலம் வேலை நடைபெற்று வருவதால் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்லாமல் என்று நினைத்த கார் எதிர்பாராத விதமாக தடுப்பு தகரத்தின் மீது அதிபயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் அரியநாயகனுக்கும், அவருடன் பயணித்த இன்னொருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரெக்கவரி வேனுக்கு  போன் செய்த அரியநாயகம் சம்பவ இடத்திலேயே காத்திருந்தார்.

விபத்து குறித்து சுமார் 2 மணியளவில் ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து தேவராஜ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பின்புறம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும் விபத்து நடந்த பகுதி புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே புதுச்சத்திரம் போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தன்னுடன்  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரையும் விபத்து பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அரியநாயகத்திடம் விபத்து குறித்து போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது, அங்கு சேலம் நோக்கி வந்த டாரஸ் லாரி அதிவேகமாக வந்துள்ளது. இதைக் கண்ட போலீசார் லாரியை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறங்கச் சொல்லி உள்ளனர். 

ஆனால் லாரி ஓட்டுனர் மது போதையில் இருந்ததால் போலீசுடன் சென்றிருந்த  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருவரை அனுப்பி டாரஸ் லாரியை பக்கவாட்டில் நிறுத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த வேன் ஒன்று  நின்று கொண்டிருந்த 2 காவலர்கள் மீது பயங்கரமாக மோதியது. அதைத்தொடர்ந்து டாரஸ் லாரியையும் பின்புறம் மோதி நின்றது. விசாரணையில் வேனில் இருந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊரான இளம்பிள்ளை திரும்பிக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது.

போலீசார்

இதில் அதி பயங்கரமாக வந்த வேன் சக்கரத்திற்கு அடியில் போலீஸ்காரர்கள் 2 பேரும் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். வேனில் வந்த 25 பேரில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீஸ்காரர்கள் உயிரிழந்ததை பார்த்த லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடினார். விபத்து ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் மாதையன் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web